Tuesday, November 3, 2009

இது வரை நடந்த உலகத்தமிழ் மாநாடுகள் - ஒரு பார்வை


15 வருடங்களுக்கு பிறகு, 9ம் உலகத்தமிழ் மாநாடு வரும் 2010ம் ஆண்டு ஜூன்()ஜூலை மாதம் கோவை மாநகரில்நடைபெறும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் “9ம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடுஎனப் பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாநாடுகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் என்ற அமைப்பின் மூலமாகத்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இவ்வமைப்பின் பங்கு சிலபல அரசியல் காரணங்களுக்காக இம்முறை இல்லை என்பது வருந்ததக்க விஷயம்

இலங்கையில் உள்நாட்டு போர் (இனப் படுகொலை) முடிந்து நம் இரத்த உறவுகள் முள்வேலிகளுக்குள் சிக்கி சிதைந்து கொண்டிருக்கும் இந்நிலையில் இம்மாநாடு தேவைதானா என்ற நியாயமான கேள்விகள் உலகத்தமிழார்வலர்களால் ஒருபுறம் எழுப்ப பட்டு கொண்டிருக்கும் இந்நிலையில் இது வரை நடந்த உலகத்தமிழ் மாநாடுகள் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

முதல் உலகத்தமிழ் மாநாடு
:
முதல் உலகத்தமிழ் மாநாடு 1966 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் நாள் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் நகரில் அப்போதைய மலேசிய பிரதமர் திரு.அப்துல் ரகுமான் அவர்களால் கோலகலமாக துவக்கிவைக்கப்பட்டது. மொத்தம் எட்டு நாட்கள் நடைப்பெற்ற இம்மநாட்டில் பண்டைய தமிழ் நாட்டின் மூவேந்தர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் கால தமிழ் சமுதாயம், வணிகம் , அயலுறவுக் கொள்கைகள்,
தமிழ் மொழி கற்பித்தல் மற்றும் தமிழ் இலக்கிய மாற்றங்கள் குறித்த 150 க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

இரண்டாம்
உலகத்தமிழ் மாநாடு:
இரண்டாம் உலக்த்தமிழ் மாநாடு 1968 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் நாள் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.அண்ணதுரை அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து ஒரு வாரம் நடைப்பெற்றது. திருக்குறள் பற்றி ஆய்வறிக்கை சம்ர்ப்பிதல் குறித்த கோரிக்கை தமிழக அரசால் முன்வைக்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் அண்ணாமலை பல்கலை கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இம்மநாட்டின் போது தான் சென்னை மெரினா கடற்கறையில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது.

மூன்றாம் உலகத்தமிழ் மாநாடு:

மூன்றாம் உலகத்தமிழ் மாநாடு 1970ம் ஆண்டு பிரான்சு நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற College de France என்ற கல்லூரியில் ஜூலை 15ம் நாள் திரு.கருணாநிதியின் மேற்பார்வையில் துவங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் நடைப்பெற்ற இம்மாநாட்டில் தற்கால தமிழ் இலக்கியம், தமிழும் சம்ஸ்கிரதமும், தமிழ் சமுதாயம் போன்ற தலைப்புகளில் விவாத்ங்கள் நடைப்பெற்றன.

நான்காம் உலகத்தமிழ் மாநாடு:

நான்காம் உலக்த்தமிழ் மாநாடு 1974ம் ஆண்டு இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் ஜனவரி 3ம் நாள் முதல் 9ம் நாள் வரை நடைப்பெற்றது. அப்போதைய இலங்கை அதிபர் சிரிமாவு பண்டாரநாயகே தலைமயிலான சிஙகள அரசின் கடும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி தமிழார்வலர்கள் பல்வேறு நாட்டிலிருந்து வந்திருந்து மாநாட்டை சிறப்புற நடத்திக்கொடுத்தனர்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு:

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு 1981ம் ஆண்டு பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் ஜனவரி மாதம் 4ம் நாள் அப்போதைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இம்மாநாட்டின் போது தான் தஞ்சையில் தமிழ் மொழி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கவியரசர் கண்ணதாசன் உட்பட பல தமிழார்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஆறாம் உலகத்தமிழ் மாநாடு: 1987ம் ஆண்டு மலேசிய தலை நகர் கோலாலம்பூர் நகரில் நடந்தது.

ஏழாம் உலகத்தமிழ் மாநாடு: மொரிஷியஸ் தீவில் நடைப்பெற்றது

எட்டாம் உலகத்தமிழ் மாநாடு: 1995ம் ஆண்டு தமிழகத்தின் நெற்கள்ஞ்சியமாம் தஞ்சை மாநகரில் நடந்தது.

ஓர் குறிப்பு: இணையத்தின் மூலமாக திரட்டிய பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இப்பதிவினை பதிந்துள்ளேன். எவ்வளவோ முயன்றும் 6,7 மற்றும் 8 ம் உலகத்தமிழ் மாநாடுகளை பற்றி தகவல்களை திரட்ட முடியவில்லை. வலையுலக நண்பர்கள் யாராவது இத்தகவல்களை வைத்திருப்பின், அவற்றை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏதும் அறியானின் இப்பதிவில் எதேனும் தவறுகள் இருந்தால் மன்னிப்புடன் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

இப்பதிவு தொடர்பான அண்மை செய்தி

9ம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக லங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை தமிழக அரசு அறிவித்துள்ளது

3 comments:

  1. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    Rex
    http://vaigaiexpress.blogspot.com

    ReplyDelete
  2. நவீனன்... நல்லதொரு முயற்சி... விடுபட்ட தகவல்களையும் ஒன்று சேர்த்தால் மிக சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
  3. மேலும் சில தகவல்களுக்கு இங்கு செல்க

    ReplyDelete