Wednesday, November 11, 2009

என்று தணியும் இந்த ’தங்க’ மோகம்!


உஸ் ...அப்பா......இப்பவே கண்ண கட்டுதேஇப்படி தான் நினைக்க தோன்றுகிறது தங்கத்தின் விலையேற்றத்தை கண்டு. சர்வதேச சந்தையில் தஙகத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதை ஷேர் மார்க்கெட் முதலீட்டார்கள் முதல் சாதாரண மக்கள் வரை கவலையுடன் கூர்ந்து கவனித்து வருவது கண்கூடு.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 750$ (அமெரிக்க டாலராக) இருந்த 1 Ounce தஙகத்தின் விலை இன்றைய தேதியில் சுமார் 1110$ க்கு வர்த்தகமாகி வருகிறது. ஏறக்குறைய 50% உயர்வு ஒரே வருடத்தில்.
1 Ounce
என்பது 28.34 Gram க்கு சமம்

2009
ம் ஆண்டில் தங்கத்தின் விலையேற்றத்தை காட்டும் படம் கீழே:



கடந்த 5 ஆண்டுகளில் தஙகத்தின் விலையேற்றத்தை காட்டும் படம் கீழே. இதில் USD என்பது அமெரிக்க டாலரிலும், INR என்பது இந்திய ரூபாயிலும் விலையேற்றத்தை குறிக்கும்.


சரி இந்த விலையேற்றத்துக்கான காரணங்கள் தான் என்ன? பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான சில காரணங்கள் இங்கே...


காரணம் 1: அமெரிக்க டாலரின் விலை வீழ்ச்சி

கடந்த
ஒரு வருடத்திற்க்கும் மேலாக நீடிக்கும் சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்ற உலக நாடுகளை விட அமெரிக்க பொருளாதாரத்தை கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. சரிந்த தனது பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு அமெரிக்க Federal Reserve (நம்ம ஊர் RBI வங்கி மாதிரி, அங்கு இந்த US Federal Reserve தான் அந்நாட்டு வங்கிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி கண்காணிக்கிறது ) எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் ஒன்று, அந்நாட்டு வங்கிகள் தரும் வட்டி விகிதததை ஏறக்குறைய 0% க்கு குறைத்துள்ளது. ஏனென்றால் அப்போது தான் தொழில் தொடங்குவோர், தொழில் மேம்படுத்துவோர் போன்றோர் வட்டி சுமையின்றி கடன் பெற்று தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள். ஆனால் அதே சமயத்தில் வங்கிகளில் சேமிப்புத் தொகைக்கும் இதே வட்டி விகிதங்கள் பின் பற்றப்படுவதால் முதலீட்டாளர்கள் வங்கிகளில் முதலீடு செய்யாமல் அதிக வருமானம் தரும் வேறு முதலீட்டு வழிகளை ஒக்காந்து யோசித்ததில் பளிச்சென்று தோன்றியது தான் தங்கத்தில் முதலீடு.
சீ சீ இப்பழம் புளிக்கும் என்பது போல, டாலரை டார்லிங்காக கருதி அமெரிக்க வங்கிகளிலும் அமெரிக்க சந்தையிலும் காலம் காலமாக முதலீடு செய்து வந்த அந்நிய முதலீட்டார்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள்


காரணம் 2: தேவைDemand

ஆசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே செல்வதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கான இன்னொரு காரணம். மேற்கு உலக நாடுகளை விட ஆசிய மக்கள் தான் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தேவைக்கேற்ற அளவு உற்பத்தி இல்லை எனபது தான் வருந்ததக்க விஷயம். உலகளவில் சராசரியாக ஒரு வருடத்திற்க்கு 3600 டன் தங்கம் தேவைபடுகிறது. (ஒரு டன் என்பது 1000 கிலோ கிராம் ஆகும்)
இந்தியாவில் மட்டும் 800 டன் தேவைப்படுகிறதாம் (அடங்கொய்யால...!) ஆனால் உற்பத்தியின் அளவோ வருடத்திற்க்கு 2600 டன்னிற்க்கும் கிழே தான். அதுவும் கடந்த சில வருடஙகளாக உற்பத்தி அளவு மேலும் குறைந்து விட்டது. காரணம் உலகிலுள்ள பெரும்பாலான தங்க சுரங்கங்களை நோஓஓண்டி நுங்கு sorry தங்கம் எடுத்தாச்சு. இனிமே தோண்டுனா வெறும் மண்ணூ தான் வருங்கிற நிலைமை.


காரணம் 3: பெருகி வரும் பணவீக்க விகிதம்

பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனினின் வீழ்ச்சி என்றும் கூறலாம். அதாவது விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது. பொதுவாக பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வது வழக்கம். இந்தையாவில் இப்போது பணவீக்க விகிதம் 1.21% மாக உள்ளது. தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யாத்தால் உணவு பொருட்களின் உற்பத்தி வருமாண்டில் குறைவாகவே இருக்கும். எனவே 2010 ம் ஆண்டு பணவீக்க விகிதம் 6% க்கும் மேல் உயரும் என நிதியமைச்சரே சொல்லி விட்டார். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான் நாடுகளிலும் இப்போது இதே நிலை தான் (இத தான் உலக மயமாக்கல் னு சொல்றாங்கிளோ??)

மேற்கூறிய காரணங்கள் போக, இப்போது திருவிழா (தீபாவளி, கிறுஸ்துமஸ், பொஙகல்....) மற்றும் திருமண காலம் என்பதால் இந்தியாவில் தங்கத்தின் மீதான டிமாண்ட் அதிகம். எனவே தங்கத்தின் விலை இனி ஏறுமுகம் தான்.

யாருக்கு தெரியும், இன்று கச்சா எண்ணெய்க்காக அடித்துக் கொள்ளும் உலக நாடுகள்.....நாளை தங்கத்திற்க்காக அடித்துகொள்ள நேரலாம்.


பொன்னான தகவல்கள்:
1. RBI
எனப்படும் Reserve Bank of India கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 200 டன் தங்கத்தை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து (IMF-International Monetary Fund) வாங்கியுள்ளது..
(
டுபுக்குடொகோமோ :இப்படி பணத்த செலவு பண்ணா, பட்ஜெட்ல துண்டு மட்டுமில்ல 16 முழ வேட்டியே விழும்!)

2.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்ஷய திருதியை தினத்தன்று மட்டும் விற்பனையான தங்கத்தின் அளவு 45 டன் (45000 கிலோ)
(
டுபுக்குடொகோமோ : ஏம்பா நம்ம இந்தியா, ஏழை நாடாமே.....மெய்யாலுமா??)

3.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அமேரிக்காவில் திவாலடைந்த வங்கிகளின் எண்ணிக்கை 125 க்கும் மேல்
(
டுபுக்குடொகோமோ: இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புதூ னு அமெரிக்க கைப்புள்ளைகள் கேக்குறதா சொல்றாங்கப்பா!)

4.
வரும் 2048 ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனி நபர் வருமானம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தனி நபர் வருமானத்தை மிஞ்சும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
(
டுபுக்குடொகோமோ: ஹி ஹி ஹி அப்ப கூட மாசக்கடைசில செலவுக்கு துட்டு இல்லாம சிங்கியடிப்போம்டோய்)



இன்றைய பன்ச்ஆமிர்தம்

"You don’t have to be great to START.....But you have to start to be GREAT!"









பதிவு புடிச்சிருந்தா தமிலிஷ் லும் தமிழ்மணத்திலும் மறக்காம ஓட்டு போடுங்க சாமீயோவ் ....

நட்புடன்,

நவீனன்



9 comments:

  1. Very good information Naveen

    ReplyDelete
  2. Golden informations. Good, keep it up!

    ReplyDelete
  3. நல்லா இருக்கு நவீன். எது தப்பு எது சரின்னு ஆராய்ச்சி செய்யாம, காரணம் என்னன்னு மட்டும் தகவல்களை திரட்டி கொடுத்திருக்கிறது சிறப்பு.. அது என்ன தமிழ் மணம், தமிலிஷ்? அங்க எப்படி ஓட்டு போடுறது?

    ReplyDelete
  4. அன்பு,

    உங்க blog a மொத்த இணைய உலகத்துக்கும் தெரிவிக்க tamilish.com & tamilmanam.com போன்றவை உதவும். மேலும் பல விவரங்களை மெயிலுகிறேன் பார்க்கவும்

    ReplyDelete
  5. அவ்வைசண்முகில அய்யர், முதலியாரா கன்வர்ட்டான மாதிரி பொறியியலாளன் பொருலியியலாளனாக மாறிட்டானா? தாய், தமிழ், தொழில்நுட்பம், வணிகம், பொருளாதாரம்னு கலந்துகட்டி கலக்கற சந்துரு!

    இரண்டு கூடுதல் தகவல்கள்:
    1.அக்டோபர் கடைசி வாரத்தைய பணவீக்கம் 13.68% (இதற்கு முந்தைய வாரம் வரை பணவீக்கம், மொத்தவிலை குறியீட்டெண்ணை (ஆண்டு) அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு வந்தது; அக்டோபர் கடைசி வாரம் முதல் அரசு அத்தியாவசிய பொருட்களின் (உணவு & எரிபொருள்) விலை (வார) அடிப்படியாக கொண்ட கணக்கீட்டை துவங்கியிருக்கிறது. இது ஓரளவிற்கு உண்மை நிலையோடு தொடர்புடையது.

    2. நரசிம்மராவ் காலத்தில் IMFல் அடகு வைக்கபட்ட தங்கத்தின் ஒரு பகுதி இப்போது மீட்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    -பா.இரா

    ReplyDelete
  6. தல பா.இரா

    வாங்க...வாங்க...என்ன டா ரொம்ப நாளா ஆள காணோம் நு பார்த்தேன். அறிவிலியானாக இருந்த என்னை அறவியலனாக மாற்றும் பயணத்தின் முதல் படியிலிருக்கிறேன் தலைவா....உஙகள் ஆசியும், வழிகாட்டுதலும் என்றென்றும் வேண்டும்

    ReplyDelete
  7. very informative, just like the previous one.....good work, keep going :)

    Uma

    P.S: Next time tamizh ley comment vida try panraen.....

    ReplyDelete
  8. Very informative, just like the previous one.....good work, keep writing :)

    Uma

    P.S: Next time tamizh ley comment vida try panraen

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ந‌வீன்.....

    உமா

    P.S: புடிச்சிட்டேன் :)

    ReplyDelete