Monday, November 23, 2009

சத்தமில்லாமல் தொலைகிறேன் .......



மகரந்த மணம் வீசும் உன் கருவண்டு விழிகளிலும்
கரிய பிறை நிலா புருவங்களிலும்
இலவம்பஞ்சினும் மிருதுவான காதுமடல்களிலும்
மல்லிகை மணம் வீசும் கார்கால கூந்தலிலும்
ஆப்பிள் நிற கன்ன கதுப்புகளிலும்
அன்றலர்ந்த ரோஜா இதழ் உதட்டின் வரிகளிலும்
செம்பருத்தி நிறத்தினை அள்ளி பூசிக்கொண்ட மேனியிலும்
உன் பிஞ்சு விரல் மென் ஸ்பரிசத்திலும்
கால்கொலுசின் சிம்பொனியிலும்
பொய் கோபம் காட்டும் மெய் சினுங்கல்களிலும்
மந்தாகினியே….
சத்தமில்லாமல் தொலைத்து கொண்டிருக்கிறேன்
உன்னில்
என்னை…!




டுபுக்குடொகோமோ: டேய் எத்தன பேர் டா இப்படி கவித எழுதறேன்னு கெளம்பியிருக்கிங்க.........கவிதையா டா இது....கய்த கய்த......உன்ன எல்லாம் சத்தமில்லாம போட்டுத்தள்ளனும்டா



டிஸ்கி: கவிதையை படித்து விட்டு யாரும் 'காண்டாமிருகமாக' வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதாவது 'காண்டா' (கோபம்) ஆன 'மிருகமா' மாறிடுவோம்ல அத சொன்னேன் ஹி.....ஹி....ஹி......



No comments:

Post a Comment