Wednesday, October 28, 2009

கன்னி பதிவு

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு,
பதிவின் தலைப்ப பார்த்தவுடனே என்னடா முதல் பதிவே gilma வானு நினைச்சிடாதிங்கப்பூ. என்னோட முதல் பதிவு என்பதை தான் அப்படி சொல்ல வற்றேன். ரொம்ப நாளாவே நாமும் வலைப்பதிவு ஆரம்பிச்சு தமிழ் சேவை செய்யனும்னு ஒரு தாகத்தோடு தான் இருந்தேன் (என்னா கொல வெறி னு நீங்க சொல்றது கேக்குது!) ஆனா இப்போ தான் முழு முயற்சியுடன் இறங்கி இருக்கேன். சத்தியமா இந்த பதிவை எழுதும் இந்த நேரம் வரை என்ன மாதிரியான பதிவுகளை பகிர்ந்து கொள்வது என்று யோசிக்கவில்லை. ஆனலும் எதாவது எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடனும், கடவுளின் ஆசியுடனும் எனது வலையுலக பயணத்தை துவங்குகிறேன்.

அம்மா

முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசிக்கையில் சட்டென்று நினைவிற்க்கு வந்தது அம்மா என்கின்ற உறவு தான். நம் வாழ்க்கையை இப்பூமியில் ஆரம்பித்து வைத்ததே அவள் தானே?
சங்க தமிழ் இலக்கியங்கள் தொட்டு இன்றைய திரைப்பட பாடல்கள் வரை அனைத்தும், அம்மா என்கிற உறவை பற்றி சொல்லாத விஷயங்களே இல்லை.

(தொப்புள் கொடி) துண்டிக்கப்படுதலில் துவங்கும் ஒரெ தொடர்பு, தாய் - சேய் உறவு. நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அது போல தாயின்றி அமையாது எவருலகும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.மனித உறவுகளில் வேறு எந்த இரு உறவுகளுக்குள்ளும் சுயநலத்தின் சுவடுகளை காணலாம், ஆனால் சேயின் மீதான தாயன்பில் சுயநலமும் தன் சுயமிழந்து போயிருக்கும்.

வேலை நிமித்தம் வெளியுரில் தங்கி வார இறுதி நாட்களில் நாம் வீடு திரும்பும் போது வாசலில் நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவளின் தவிப்பு,
நம்மை ஈன்ற போது அவள் பட்ட தவிப்பிற்க்கு சற்றும் குறைவில்லாதது.

எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன

’எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை பொன் காக்கை.

நேரில் நின்று பேசும் தெய்வம் இதை விட வேறு வார்த்தைகள் தேவையில்லை அவளின் பெருமை பேச. எனை ஈன்ற என் தாய்க்கும், அவளுக்கு இணையான என் தாய் மொழி தமிழுக்கும் எனது இந்த முதல் பதிவை சமர்ப்பிக்கிறேன்...


நட்புகளே,
பதிவை பற்றிய உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

எனது பதிவுகளை தமிழ்மணம், தமிலிஷ் போன்ற வலைத்தளங்களில் எவ்வாறு இணைப்பது என்று உதவ இருப்பவர்களுக்கு எனது நன்றிகளை இப்போதே பதிவு செய்கிறேன்

உங்கள் ஆதரவும், உதவிகளும் தான் இந்த ஏதும் அறியானின் வலையுலக பயணத்தின் வழிகாட்டிகள்.


நட்புடன்,
நவீனன்